Wednesday, August 21, 2013

இறை வழிபாடும் வாழ்வியலும்...


நமது நாட்டில் இறை வழிபாடும் அதன் உள்ளோடும் வாழ்வியலும் 



நமது சமுதாயம் தொன்மையானது.

பழக்க வழக்கங்கள், சடங்குகள் சம்பிரதாயங்கள் இரண்டு ஆயிர ஆண்டு கால நடைமுறைகளை வழிபடுத்தி அதன் பரிணாம வளர்ச்சி கொண்டது. 

அர்த்தமுள்ளதாகவும் வெறும் சடங்குகளாகவும் உள்ளவைதான்.

சகிப்புதன்மை கொண்ட சமுகம் ஆனதால் வாழ்வியல் துன்பங்களை மறக்க விழாக்கள் அடிக்கடி எடுத்து கொண்டாடினார்கள்.

பகல் முழுக்க வேலை செய்தவர்கள் விழாக்களை இரவு முழுக்க கொண்டாடினார்கள். 

மின்சாரம் வந்து நூற்று ஐம்பது ஆண்டுகளுக்குள்தான் இருக்கும் அதற்கு முன்னால் முழு நிலவும் தீபந்தங்களும் தீப விளக்குகளும் துணை செய்தன. 

இறை என்ற கருத்துருவாக்கம் SELF DEFENCE SYSTEM என்று கொள்ளலாம்.

ஒரு கஷ்டம் வந்தால் இறையிடம் முறையிடுவார்கள்.

சமுக கட்டுப்பாட்டு வாழ்வியலை மீறினால் இறையின் தண்டனைக்கு உள்ளாவோம் என்ற அழ்ந்த நம்பிக்கை.

சாதனை நடந்தால் இறை அருள் என்று கொண்டாடுவார்கள்.

இறைவனுக்கு அனைவரும் கட்டுப் படுவார்கள்.

எல்லா கலைகளை /இலக்கியங்கள் இறையை சுற்றி அமைக்க பெற்றன. 

குடியிருப்பு பகுதியையே இறை ஆலயத்தை சுற்றி அமைக்க பெற்றன.

இறை பேரில் சொத்து சேர்க்க பெற்றன. இறைக்கு மான்யம் வழங்க பெற்றன. இயற்கை பேரழிவு வந்தால் ஆலயமே புகலிடம் 

யாத்ரிகர்களுக்கு உணவு,இருக்க இடம், பொழுதுபோக்கு நடவடிக்கை  எல்லாம் இறையை மையமாக கொண்டே நடந்தது 

வேலைவாய்ப்புக்கும் இறை வழிபாடு மிகவும் உதவி செய்தது. செய்து கொண்டு இருக்கிறது 

1)மறை ஓதும் அந்தணர் 

2)திருமுறை ஓதும் ஓதுவார் 

3)மடைப்பள்ளி விற்பனர் 

4)பூகொய்து மாலை தொடுப்போர் 

5)சந்தானம் அரைப்போர் 

6)பல்லக்கு தூக்கிகள் 

6)தீவட்டிகார்கள் 

7)பசுமடம் மேலாண்மை செய்வோர் 

8)பூஜை பொருள் உற்பத்திசெய்வோர் விற்பனையாளர்கள் 

9)நடனம் ஆடுவோர் 

10)புலவர்கள் 

11)மர, உலோக ,கற் சிற்பிகள்

12)இறை நில விவசாயிக்கள் 

13)பொற்கொல்லர்கள் 

14)ஓவியகாரர்கள் 

-இப்படி சொல்லிகொண்டே போகலாம் 

எல்லாவற்றிக்கும் அடிப்படை இறை நம்பிக்கையே...

இன்றைய நாகரிக வளர்ச்சியில் இன்னமும் கிராமங்களில் இறைவழிபாடு கொண்டாட்டம் இரவு நேரத்தில் சாமி உலா என்று கொண்டாடுவது தொன்மையின் எச்சமே...

நன்றி:மீனாட்சி சுந்தரம் சோமையா