Tuesday, April 28, 2015

சாதிய கட்டமைப்பை உடைக்க முடியுமா? - 1


படிப்பறிவுள்ள இன்றைய காலகட்டத்தில் நம் தமிழ்நாட்டிலும் மற்றும் அண்டை மாநிலங்களிலும் ஏன் அனைத்து இந்தியா மாநிலங்களிலும்  கூட சாதிய வன்கொடுமைகளும், சாதிய கலவரங்களும் தொடர்ந்து நடைபெற்று கொண்டே இருக்கின்றன. இதனால் பல உயிர் இழப்புகளும், பல பிரச்சனைகளும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. இவற்றிற்கெல்லாம் ஒரு முடிவே இல்லையா? எப்பொழுது தீரும் இந்த சாதிய வன்கொடுமைகளும் சாதிய கலவரங்களும் என்பதே தற்போது அனைத்து சமூக நலவிரும்பிகளும் எண்ணுவது.

இந்த சாதியத்தை எதிர்த்து பல்வேறு காலகட்டங்ககளில் பல்வேறு தலைவர்கள் போராடினார்கள் இன்றும் போராடிக்கொண்டு தான் இருக்கின்றார்கள். ஆனால் இந்த சாதிய கட்டமைப்பை உடைக்க முடியவில்லை. இதற்கான காரணங்களை நாம் ஆராய தான் வேண்டும். பல வருடங்களுக்கு முன்பு தொழில் ரீதியாக பிரிக்கப்பட்ட இந்த பிரிவானது நாளடைவில் சாதி என்னும் விதையாக மாறி தற்போது மிகப்பெரிய விருட்சமாக வளர்ந்துள்ளது.
இந்த சாதிய வன்கொடுமைகளையும் கலவரங்களையும் தடுக்க அரசாங்கம் கலப்பு திருமணம், சமத்துவபுரம் இப்படி ஒரு சில முயற்சிகள் மேற்கொண்டு தான் வருகிறது. இருந்தாலும் தற்போது பெரிய விருட்சமாக வளர்ந்து இருக்கும் சாதிய கட்டமைப்பை உடைக்க இவை எல்லாம் முடியவில்லையே!!!
டாக்டர்.அம்பேத்கர் முதல் ஈ.வெ.ரா.பெரியார் வரை சாதியத்தை எதிர்த்து போராடினார்கள். ஆனால் இந்த சாதிய கட்டமைப்பை உடைக்க முடியவில்லை. எனவே  சமுதாயத்தில் பின்தங்கியவர்களுக்கு ஒரு சில சலுகைகளை அறிவித்துவிட்டு சென்றுவிட்டனர். "சாதி தான் சமுதாயம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்" என்று  டாக்டர்.அம்பேத்கர் கூறி இருக்கிறார் என்றால் சாதிய ரீதியாக அவர் மனம் எந்த அளவிற்கு புண்பட்டிருந்தால் அப்படி பேசி இருப்பார் என்பதை சற்று சிந்தித்து பாருங்கள்...
சரி இருக்கட்டும். இந்த சாதிய வன்கொடுமைகளுக்கும், சாதிய கலவரங்களுக்கும், காரணமாக இருப்பது தீண்டாமை என்ற ஒரு விருட்சம். இந்த தீண்டாமைக்கு வேராக சாதி என்னும் கட்டமைப்பு உள்ளது. இந்த சாதி என்னும் கட்டமைப்பை இடித்து தரை மட்டமாக்க முடியுமா? என்பதை அடுத்த பதிவில் காணலாம்....


Thursday, January 23, 2014

மது குடிக்க சொன்ன கர்த்தர்...

எரேமியா 25

15 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் என்னை நோக்கி: நான் உன்னை அனுப்புகிற ஜாதிகள் குடித்து, நான் தங்களுக்குள் அனுப்பும் பட்டயத்தால் அவர்கள் தள்ளாடி, புத்திகெட்டுப்போகும்படிக்கு,
16 இந்த உக்கிரமாகிய மதுபானத்தின் பாத்திரத்தை நீ என் கையிலிருந்து வாங்கி, அவர்கள் எல்லாருக்கும் அதிலே குடிக்கக்கொடு என்றார்.
கர்த்தருடைய கையிலிருந்து மதுபான பாத்திரத்தை  தீர்க்கதரிசியாகிய எரேமியா வாங்கி அதிலுள்ள மதுவை மக்களுக்கும், தேசத்தின் ராஜாக்களுக்கும் குடிக்க கொடுக்கிறார்.
17 அப்பொழுது நான் அந்தப் பாத்திரத்தைக் கர்த்தருடைய கையிலிருந்து வாங்கி, கர்த்தர் என்னை அனுப்பின எல்லா ஜாதிகளுக்கும் குடிக்கக் கொடுத்தேன்.
18 எருசலேமுக்கும் யூதாவின் பட்டணங்களுக்கும், அதின் ராஜாக்களுக்கும், அதின் பிரபுக்களுக்கும், அவர்களை இந்நாளிலிருக்கிறபடி வனாந்தரமும் பாழும் இகழ்ச்சிக்குறியாகிய ஈசல்போடுதலும் சாபமுமாக்கிப்போடும்படி குடிக்கக்கொடுத்தேன்.
19 எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கும், அவன் ஊழியக்காரருக்கும், அவன் பிரபுக்களுக்கும், அவனுடைய எல்லா ஜனத்துக்கும்,
20 கலந்து குடியிருக்கிற அனைவருக்கும், ஊத்ஸ் தேசத்தினுடைய எல்லா ராஜாக்களுக்கும், பெலிஸ்தருடைய தேசத்தில் இருக்கிற எல்லா ராஜாக்களுக்கும், அஸ்கலோனுக்கும், காசாவுக்கும், எக்ரோனுக்கும், அஸ்தோத்தில் மீதியானவர்களுக்கும்,
21 ஏதோமுக்கும், மோவாபுக்கும், அம்மோன் புத்திரருக்கும்,
22 தீருவினுடைய எல்லா ராஜாக்களுக்கும், சீதோனுடைய எல்லா ராஜாக்களுக்கும், சமுத்திரத்துக்கு அக்கரையான தீவுகளின் ராஜாக்களுக்கும்,
23 தேதானுக்கும், தேமாவுக்கும், பூசுக்கும், கடையாந்தரங்களிலுள்ள அனைவருக்கும்,
24 அரபிதேசத்து எல்லா ராஜாக்களுக்கும், வனாந்தரத்தில் கலந்து குடியிருக்கிறவர்களுடைய எல்லா ராஜாக்களுக்கும்,
25 சிம்ரியினுடைய எல்லா ராஜாக்களுக்கும், ஏலாமினுடைய எல்லா ராஜாக்களுக்கும், மேதியாவினுடைய எல்லா ராஜாக்களுக்கும்,
26 வடக்கேயிருக்கிற எல்லா ராஜாக்களுக்கும், சமீபமானவர்களும் தூரமானவர்களுமாகிய அவரவர்களுக்கும், பூமியின் மீதிலுள்ள சகல தேசத்து ராஜ்யங்களுக்கும் குடிக்கக்கொடுத்தேன்; சேசாக்கு என்கிற ராஜாவும் அவர்களுக்குப் பிற்பாடு குடிப்பான் என்றார்.
27 நீங்கள் குடித்து, வெறித்து, வாந்திபண்ணி, நான் உங்களுக்குள் அனுப்பும் பட்டயத்தாலே எழுந்திராதபடிக்கு விழுங்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார் என்று நீ அவர்களுக்குச் சொல்லு.
28 அவர்கள் குடிக்கிறதற்கு அந்தப் பாத்திரத்தை உன் கையில் வாங்கமாட்டோம் என்று சொல்வார்களானால், நீ அவர்களை நோக்கி: நீங்கள் குடித்துத் தீரவேண்டும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல்லு.
தேசத்தின் ராஜாக்களோ அல்லது மக்களோ மது குடிக்க மாட்டேன் என்று சொன்னால் சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் "நீங்கள் குடித்தே தீர வேண்டும்" என்று சொல்லு.
29 இதோ, தீங்கைக் கட்டளையிட நான் என் நாமம் தரிக்கப்பட்ட நகரத்திலே துவக்கும்போது, நீங்கள் தண்டனைக்குத் தப்புவீர்களோ? நீங்கள் தப்புவதில்லை; நான் பூமியின் எல்லாக் குடிகளின்மேலும் பட்டயத்தை வரவழைக்கிறேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
30 ஆதலால் நீ அவர்களுக்கு விரோதமாக இந்த வார்த்தைகளையெல்லாம் தீர்க்கதரிசனமாக உரைத்து, அவர்களை நோக்கி: கர்த்தர் உயரத்திலிருந்து கெர்ச்சித்து, தமது பரிசுத்த வாசஸ்தலத்திலிருந்து தம்முடைய சத்தத்தைக் காட்டி, தம்முடைய தாபரத்துக்கு விரோதமாய்க் கெர்ச்சிக்கவே கெர்ச்சித்து, ஆலையை மிதிக்கிறவர்கள் ஆர்ப்பரிப்பதுபோல் பூமியினுடைய எல்லாக் குடிகளுக்கும் விரோதமாக ஆர்ப்பரிப்பார் என்று சொல் என்றார்.
31 ஆரவாரம் பூமியின் கடையாந்தரமட்டும் போய் எட்டும்; ஜாதிகளோடே கர்த்தருக்கு வழக்கு இருக்கிறது; மாம்சமான யாவரோடும் அவர் நியாயத்துக்குள் பிரவேசிப்பார்; துன்மார்க்கரைப் பட்டயத்துக்கு ஒப்புக்கொடுப்பார் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
32 இதோ, ஜாதிஜாதிக்குத் தீமை பரம்பும், பூமியின் எல்லைகளிலிருந்து மகா புசல் எழும்பும்.
33 அக்காலத்திலே பூமியின் ஒருமுனை துவக்கி பூமியின் மறுமுனைமட்டும் கர்த்தரால் கொலையுண்டவர்கள் கிடப்பார்கள்; அவர்கள் புலம்பப்படாமலும் சேர்க்கப்படாமலும் அடக்கம் பண்ணப்படாமலும் பூமியின்மேல் எருவாவார்கள்.
34 மேய்ப்பர்களே, அலறுங்கள்; மந்தையில் பிரஸ்தாபமானவர்களே, சாம்பலில் புரண்டு கதறுங்கள்; நீங்கள் வெட்டப்படவும் சிதறடிக்கப்படவும் உங்கள் நாட்கள் நிறைவேறின; உச்சிதமான பாத்திரம்போல் விழுந்து நொறுங்குவீர்கள்.
35 மேய்ப்பர்கள் ஓடிப்போகிறதற்கும், மந்தையில் பிரஸ்தாபமானவர்கள் தப்பித்துக்கொள்ளுகிறதற்கும் இடமிராது.
36 தங்கள் மேய்ச்சலைக் கர்த்தர் பாழாக்கினதினிமித்தம் மேய்ப்பர்கள் கூப்பிடுகிறதும், மந்தையில் பிரஸ்தாபமானவர்கள் அலறுகிறதுமான சத்தமுண்டாகும்.
37 அவர்கள் சுகித்திருந்த தாபரங்கள் கர்த்தருடைய கோபத்தின் எரிச்சலாலே சங்காரமாயின.
38 அவர் பதிவிருந்து புறப்படும் சிங்கத்தைப் போலிருப்பார்; ஒடுக்குகிறவனுடைய உக்கிரத்தினாலும், அவனுடைய உக்கிரகோபத்தினாலும் அவர்கள் தேசம் பாழாயிற்றென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார். 

தாழ்த்தப்பட்டோர் வரலாறு - 5


நாடோடி வாழ்வும் நிரந்தர குடியிருப்பும்...

ஆதி கால மக்கள் நாடோடிகளாக வாழ்ந்தனர். அவர்களின் சொத்து கால்நடைகளே. இவர்கள் கூட்டம் கூட்டமாக கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலங்களை தேடி இடம்பெயர்ந்தனர்.

கால்நடைகள் மட்டுமே செல்வமாக கொண்ட மக்களுக்கு புதிய செல்வமாக நிலம் கிடைத்தது. அதனை உழுது பயிரிட்டனர். ஆகவே இடம் மாறுவது நின்று நிலையான வசிக்கும் இடங்கள் அமைத்து வாழத்தொடங்கினர். இந்த நிரந்தர குடியிருப்புகள் நாகரீக காலத்தை குறிக்கிறது.

எல்லா கூட்டத்தினரும் ஒரே சமயத்தில் நிரந்தரமாக வசிக்க தொடங்கவில்லை. சில கூட்டத்தினர் நிரந்தர குடியமர்ந்தபோது வேறு சில கூட்டத்தினர் நாடோடிகளாகவே திரிந்தனர். இப்படித்தான் ஒருபுறம் நாகரீகத்தால் உயர்ந்த திராவிடர்கள் நிரந்தர குடியிருப்புகள் அமைத்து உழவு தொழில் செய்து வாழ்ந்து வந்தபோது ஆரியர்கள் நாடோடி கூட்டங்களாகவே சுற்றி திரிந்து வந்தனர். நாடோடி கூட்டத்தினர் எப்பொழுதும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொண்டே இருந்தனர். காரணம் மற்றவர்களின் கால்நடைகளை திருடுவது; மாதர்களை கடத்துவது; மற்றவர்களின் மேய்ச்சல் நிலங்களில் கால்நடைகளை விட்டு மேய்ப்பது மட்டுமே செய்து வந்தனர். ஆரிய நாடோடிகள் நீண்ட இடைவேளைக்குப்பின் இருபெரும் கூட்டங்களாக வந்ததாக தெரிகிறது. முதல் கூட்டம் மேய்ச்சலுக்காக சிந்துவெளியில் நுழைந்தபோது அங்கே நிரந்தர குடியிருப்புகளாக செல்வசெழிப்போடு வாழ்ந்த திராவிடர்களை கண்டபோது, அவர்களின் செல்வங்களை கண்டு பொறாமை கொண்டனர்.

சிதறுண்டவர்கள் (SCATTERED PEOPLE)...

நாடோடிகளுக்கு வெறும் கால்நடைகளே சொத்துக்கள் ஆனால் ஓரிடத்தில் குடியமர்ந்து வாழ்ந்த இம்மக்களுக்கு கால்நடைகளுடன் தானியங்களும் சொத்துக்களாக இருந்தன. ஆகவே அந்த சொத்துக்களை கொள்ளையிட நாடோடி கூட்டங்கள் நிரந்தர குடியிருப்போரை தாக்கி தோற்கடித்து சிதறடித்தனர். சொத்துக்களையும், சொந்தங்களையும் இழந்த அம்மக்கள்[திராவிடர்கள்] சிறு சிறு கூட்டங்களாக சிதறுண்டவர்களாக எல்லா திசைகளிலும் எப்பொழுதும் சுற்றிக்கொண்டே இருந்தனர். இந்த சண்டைகளும், வெளியேற்றங்களும் பல ஆண்டுகளாக தொடர்ந்து நிகழ்ந்துக்கொண்டே இருந்தன. சில நிகழ்வுகளில் நாடோடி கூட்டங்களுக்கும், தோற்கடிக்கப்பட்டு களவாடப்பட்ட மாதர்களுக்கும் கலப்புகளும் நிகழத்தொடங்கின. மேய்ச்சலுக்கு வந்த நாடோடி கூட்டங்களும் காலப்போக்கில் நிரந்தர குடியிருப்புகளில் வசிக்க தொடங்கினர். நீண்ட கால இடைவெளியில் இந்நிலையில் மேலும் மேலும் வந்து கொண்டிருந்த பெரும்கூட்டமாக வந்த நாடோடிகள் நிரந்தர குடியிருப்புகளை தாக்குவதும் பின்பு தாக்கியவர்களே நிரந்தரமாவதும் தொடர்ந்து கொண்டிருந்தன.

ஆகவே இந்நிலையில் 3 விதமான [கூட்டங்களை] மக்களை காண்கிறோம்.
1. தோல்வியுற்று சிதறுண்டு அலைகிற மக்கள்
2. நிரந்தரமாக குடியமர்ந்தவர்கள் [வெற்றி பெற்ற ஒரு நாடோடி கூட்டம்]
3. இன்றும் நாடோடிகளாகவே அலைந்துக்கொண்டு திடீர் திடீர் என தாக்குதல் நடத்தும் கூட்டம்.

(தொடரும்...)