மனிதனின் பிரச்சனைகள்...
மனிதனின் மனம் எப்பொழுதும் குழப்பங்களையும், போராட்டங்களையும் உடைய ஒரு போர்க்களமாக இருக்கிறது. தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் உள்ள இடத்தில் தான் குழப்பமும், போராட்டமும் தோன்ற முடியும். மிருகங்களின் மனதில் குழப்பமோ, போராட்டமோ தோன்றுவதில்லை. அவை சைவ உணவை சாப்பிடலாமா இல்லை அசைவ உணவை சாப்பிடலாமா என்று தம்மை குழப்பி கொள்வதில்லை. இயற்கையில் அந்த இனம் எப்படி அமைக்கப்பட்டிருக்கிறதோ எப்படி Program செய்யப்பட்டிருக்கிறதோ அப்படியே அவை செயல்படுகின்றன. அவற்றுக்கு தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் இல்லை. மனிதனுக்கு மட்டுமே இந்த அறிய சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்க வேண்டும் என்னும் போது தான் எதை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பங்கள் ஏற்படும். இந்தப் பள்ளியில் சேர்க்கலாமா? வேறு பள்ளியில் சேர்க்கலாமா? இந்த பாடத்தை எடுத்துக் கொள்ளலாமா, வேறு பாடத்தை எடுத்துக்கொள்ளலாமா? மேலே படிக்கலாமா? வேண்டாமா? இந்த வேலையை செய்யலாமா அல்லது வேறு வேலையை தேடலாமா? திருமணம் செய்துக்கொள்வதா, வேண்டாமா? சிறிது தள்ளி போடலாமா? ஸ்கூட்டர் வாங்கலாமா? சைக்கிள் வாங்கலாமா? அதிலும் 'யுனிகான்' வாங்கலாமா, 'பல்சர்' வாங்கலாமா? இப்படி வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் நாம் திரும்பத் திரும்ப சிந்திக்க வேண்டி இருக்கிறது. ஒரு பெரிய தொழிலதிபர் புதிய தொழிலை தொடங்கலாமா, இருப்பதையே இன்னும் விஸ்தரிக்கலாமா? என்று குழம்பலாம். வீட்டிலுள்ள பெண்மணிகள் "இன்று வெண்டைக்காய் சமைப்பதா? கத்திரிக்காய் சமைப்பதா?" என்று குழம்பலாம். ஆனால் ஒவ்வொரு மனிதனுடைய மனதிலும் இவ்வித குழப்பங்களும் போராட்டங்களும் தினந்தோறும் உள்ளன. ஒவ்வொரு மனமும் ஒரு யுத்த களமாக இருக்கிறது.
அடிப்படை பிரச்சனை...
பகுத்தறியும் சக்தியும், தேர்ந்தெடுக்கும் சுதந்திரமும் மனிதனுக்கு கொடுக்கப்பட்டுள்ள மிக அரிய வரப்பிரசாதமாகும். ஆனால் இந்த வரமே சாபமும் ஆகும். காரணம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால் குழப்பத்தையும், போராட்டத்தையும் தவிர்க்க முடியாது. போராட்டங்களும், குழப்பங்களும் வரும் போது மனிதன் கடவுளிடம் உதவிக்கு செல்கிறான். எருமைமாடு கோயிலுக்கோ, சர்ச்சுக்கோ, மசூதிக்கோ சென்று கடவுளை வழிபடுவதை நாம் காண்பதில்லை. தனக்கு கிடைத்தவற்றுக்காக கடவுளுக்கு நன்றி செலுத்துவதும் இல்லை. ஆனால் மனிதனோ இவற்றையெல்லாம் செய்கிறான் என்? தனக்கு இவற்றின் மூலம் மனோதிடமும், அமைதியும் கிடைக்கும் என்று தான். ஒவ்வொரு கட்டத்திலும் பிரச்சனைகளும், அவற்றுக்கான தீர்வை தேடும் அவசியமும் அவனுக்கு இருப்பதால்தான்.
வழியில் ஒருவரை சந்திக்கிறோம். மரியாதைக்காக அவரை "எப்படி இருக்கிறீர்கள்" என்று கேட்கிறோம். அவர் இப்படி யாராவது நம்மை கேட்க வேண்டும் என்று காத்திருந்தது போன்று, தன் வாழ்க்கை பிரச்சனைகளை எல்லாம் சொல்ல ஆரம்பித்து விடுகிறார். இவருக்கு மட்டும் தான் பிரச்சனைகள் இருக்கின்றனவா என்றால், இல்லை. மற்றவர்களுக்கும் உண்டு தான். ஆனால் அவர்களுக்கு தெரியும் இந்த கேள்வி ஓர் உபசாரத்திற்காக மட்டுமே கேட்கப்படுகிறது என்று. ஆதலால் அவர்கள் சௌக்கியம், நலம், நன்று என்று இப்படி எதாவது ஒன்றை சொல்லிவிட்டு தன் வழியே நடந்து விடுகிறார்கள். எல்லோர் மனமும் ஒரு போர்க்களம்; எல்லோருக்கும் பிரச்சனைகள் உண்டு என்பது தான்.
மிருகத்தின் கவனமானது தன் உணவு, இனப்பெருக்கம் இவற்றில் மட்டுமே உள்ளது. இவற்றுக்காக அது தன் இயல்பின்படி செயல்படுகின்றன. மனிதனுக்கும் இவை உண்டு என்றாலும், இவற்றுடன் வேறொன்றும் அவனுக்கு உண்டு. அதாவது எந்த நேரத்தில் எப்படி செயல்படும் என்று அறிய முடியாத மனம் தான் அது. காலையில் எழுந்திருக்கும் போது உலகத்தின் சிகரத்தில் இருப்பதாக உணரும் ஒருவன், மாலை நேரத்திற்குள் அதல பாதாளத்தில் விழுந்த மாதிரி உணர்கிறான். ஒருநாள் மிகவும் நட்புடன் இருப்பவன், மறுநாள் எப்படி பேசினாலும் சண்டைக்கு வருகிறான். அப்பொழுது அக்கறையுடன் கூறப்படும் ஒரு சிறிய விமர்சனம் கூட அவனுக்கு குற்றச்சாட்டாகப் படுகிறது. மற்றவர்களுடன் அவனால் ஒரே சீரான விதத்தில் உறவுகொள்ள முடிவதில்லை காரணம், அவன் மனதின் மாற்றங்கள் தான். ஏன், இன்னும் சொல்லுவதென்றால், அவனுக்கு தன்னுடனேயே எப்படி உறவு கொள்ளுவதென்று, தெரிவதில்லை. இப்படி மாறிக்கொண்டே இருக்கும், போராடிக்கொண்டே இருக்கும் மனம் இந்த காலத்தின் கோளாறு என்பதில்லை அது எல்லா காலங்களிலும் இருந்திருக்கிறது. அது தொன்மையான பிரச்சனை! மனிதனின் அடிப்படையான பிரச்சனை!
நம் எல்லா தேவைகளையும், ஆசைகளையும் நிறைவேற்றி விட்டால், இந்த பிரச்சனை தீராதா? ஊஹும், எல்லா தேவைகளையும் ஆசைகளையும் நிறவேற்றி விட்டாலும் அடுத்தது என்ன செய்வது என்ற பிரச்சனை முளைத்து விடும். தினந்தோறும் தூங்கும்போது தற்காலிகமாக இந்த போராட்டத்திற்கு ஆரம்பித்து விடுகிறது. ஆதலால் மனம் உள்ளவரை - அது விழிப்பானாலும் சரி, கனவானாலும் சரி - இந்த போராட்டம் தொடர்கிறது.
இந்த போராட்டத்துடன் நம்மால் வாழ முடிவதில்லை சரி, போதை மருந்துகள், தூக்க மாத்திரை போன்றவற்றால் மனதை மரத்து போக செய்துவிடலாமே என்றால், அவற்றின் வேலை முடிந்தவுடன் மனம் விழித்தெழுகிறது. அத்துடன் போராட்டங்களும் எழுகின்றன. மனதை வேலை செய்ய விடாமல் மரத்து போக செய்து, அதனால் போராட்டங்கள் ஓய்ந்து விட்டன என்று நாம் நினைக்கும் கற்பனை உலகில் வாழ வேண்டுமா? அல்லது, இந்த போராட்டங்களை எதிர்த்து ஒரு தீர்வு காண வேண்டுமா? எது நமக்கு வேண்டும்? நம் மனம் நமக்கு வேண்டும் என்றால், இதில் உண்மையில் தேர்ந்தெடுப்பதற்கு ஏதும் இல்லை. ஆதலால் இந்த மனம் பற்றிய பிரச்னைக்கு ஓர் அடிப்படை தீர்வு காண வேண்டும்.
மாற வேண்டும் என்ற ஆசை...
மனம் மிக அரிய சக்திகள் படைத்தது. அதனால் தன்னை வருத்திக்கொள்ளும் சக்தியும் கொண்டது. இப்படி மனப்போராட்டங்கள் வருந்தும் மனிதன், நடுத்தெருவில் உட்கார்ந்து காதை பிய்க்குமாறு ஒலிக்கும் ஹாரன் சப்தத்தை சட்டை செய்யாமல், தன் உணவை அசைபோடும் எருமை மாட்டை பார்க்கிறான். அப்பொழுது "இந்த மாடு எவ்வளவு கொடுத்து வைத்தது?" என்று அவன் பொறாமைபடுவதில் ஆச்சர்யம் என்ன? எருமை மாட்டுக்கு தன்னை பற்றிய - நான் மகிழ்ச்சியாய் இல்லை என்ற இம்மாதிரியான - சுய உருவங்கள் self image இல்லை. ஆதலால், அது ஆனந்தமாக இருக்கிறது. எவ்வித மனப்போராட்டமும் இன்றி தன் இயல்பின்படி அது செயல்படுகிறது. நான் இப்படி இருக்கிறேன் இது சரியல்ல. நான் மாற வேண்டும் என்ற உணர்வெல்லாம் அதற்கு இல்லை. 'நான் இருக்கும் விதத்தில் நான் சந்தோஷமாக இல்லை' என்னும் 'காம்ப்ளெக்ஸ்' அதற்கு இல்லை.
மாற வேண்டும் என்ற ஆசை மனித இனத்திற்கே உரியது. புத்தி என்ற வலிமையினால் மனிதன் இந்த உலகத்தை பற்றி மட்டும் உணர்வு பெறுவதில்லை. தன்னை பற்றியும் உணர்வு பெறுகிறான். இந்த தன்னுணர்வு தான், self-consciousness தான் மிருகங்களிடம் இருந்து மனிதனை வேறுபடுத்துகிறது. தன்னை பற்றிய உணர்வு இருக்கிறது என்பது மனிதனின் சிறப்பை காட்டுகிறது. ஆனால், 'நான்', 'நான்' என்று மனிதன் உணர்கிற அந்த 'நான்' என்பதை பற்றி இவன் கொண்டுள்ள உணர்வு 'நான்' பலவித குறைபாடுகள் உள்ளவன், நிறைவற்றவன் என்பது தான். இப்படி குறைபாடுகளுடன் உள்ளதாக எண்ணப்படும் 'நான்' என்பது சங்கீதத்தில் உள்ள சுருதி போன்றது. பாடகர் பாடும்போது ராகங்கள் மாறலாம், ஸ்வரங்கள் மாறலாம். ஆனால், சுருதி மாறுவதில்லை அவர் பின்னே உள்ள தம்பூராவின் ஒலி 'ஸ...ப...ஸ...' என்று விடாமல் ஒலிக்கிறது. அம்மாதிரியே மனிதன் எதை செய்தாலும், எதை நாடினாலும் அவன் மனதில் 'நான் நிறைவு பெற வேண்டும், நான் நிறைவு பெற வேண்டும்' என்ற ஆதார சுருதி மாறாமல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. எப்படி இந்த 'ஸ...ப...ஸ...' மற்ற ஸ்வரங்களுடன் கூடி வெவ்வேறு ராகங்களாக வடிவெடுக்கிறனவோ, அது மாதிரியே எது குறைகிறது என்ற ராகங்கள் மாறலாம். ஆனாலும், 'நான் நிறைவு பெற வேண்டும்' என்ற ஆதார சுருதியுடன் சேர்ந்தே இவை ஒலிக்கின்றன.
இது தான் அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம். 'நான் நிறைவடைய வேண்டும்' என்ற இந்த வேட்கையே மனிதனின் பல்வேறு சிந்தனைகள், ஆசைகள், குழப்பங்கள், போராட்டங்கள் இவை அனைத்திற்கும் அடிப்படையாக அமைகிறது. போராட்டம் என்றாலே தீர்வு காணும் வரை நிம்மதி கிடையாது. ஆதலால் போராட்டத்திலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காக மனிதன் பல்வேறு விதங்களில் மாற்றத்தை விரும்புகிறான். மனிதனால் மாற முடியும், மாற்ற முடியும் என்பதே அவன் மாற்றத்தை விரும்புவதற்கான காரணமாகும்.
குறிப்பு:ஸ்வாமி தயானந்த ஸரஸ்வதி எழுதிய பகவத்கீதையின் ஸராம்சம் என்ற நூலிலிருந்து தொகுக்கப்பட்டது.

தொடரும்...
குறிப்பு:ஸ்வாமி தயானந்த ஸரஸ்வதி எழுதிய பகவத்கீதையின் ஸராம்சம் என்ற நூலிலிருந்து தொகுக்கப்பட்டது.
No comments:
Post a Comment