Thursday, January 3, 2013

திருவள்ளுவர் யாரை இறைவன் என்று குறிப்பிடுகிறார்?



"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
 பகவன் முதற்றே உலகு"





திருவள்ளுவர் எங்கள் மதத்தை சார்ந்தவரே என்று இந்து மதம், புத்த மதம், சமண மதம், ஜைன மதம் என்று பல மதத்தை சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள் அந்த வரிசையில் இப்பொழுது கிறிஸ்துவ மதம் சேர்ந்துள்ளது... 

பொதுவாக பார்த்தால் ஏன் திருவள்ளுவருக்கு இவ்வளவு பேர் சொந்தம் கொண்டாடுகிறார்கள் என்றால், திருவள்ளுவர் திருக்குறளில் சொல்லி உள்ள கருத்துக்கள் எம் மதத்தை சார்ந்தவையே என்று பெருமை பாராட்டி கொள்ளவே அல்லாமல் வேறொன்றுமில்லை...

அப்படி பார்த்தால் எந்த மதத்திலும் சொல்லாத கருத்துக்களை கூட திருவள்ளுவர் சொல்லி உள்ளார் என்பதே உண்மை...

அவ்வளவு ஏன் கற்பனையில் வரையப்பட்ட அவரது உருவத்திற்கே வேட்டு வைப்பது போல் "மழுத்தாலும், நீட்டலும் தவறு" என்ற குறள் உள்ளது, அதாவது தலை முடியை மழுத்தாலும், தாடியை நீட்டலும் தவறு என்ற குறள் உள்ளது...


குறள் 280:
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்.
"உலகத்தாரின் பழிப்புக்கு உள்ளாகும் செயல்களைத் துறக்காமல் ஒரு துறவி, தனது தலையை மொட்டையடித்துக் கொண்டோ, சடாமுடி வளர்த்துக் கொண்டோ கோலத்தை மட்டும் மாற்றிக் கொள்வது ஒரு ஏமாற்று வித்தையே ஆகும்."

மற்ற மதத்தினராவது பரவாஇல்லை கிறிஸ்துவர்கள் ஒரு படி மேலே சென்று தோமா தான் திருவள்ளுவருக்கே பாடம் சொல்லி கொடுத்தார், தோமா சொன்ன போதனையில் தான் திருவள்ளுவரே திருக்குறள் எழுதினார், திருவள்ளுவருக்கு சுயமாக சிந்திக்கும் திறன் இல்லை என்பது போல் சொல்கிறார்கள்.

ஆனால் வள்ளுவர்,
எல்லா உயிர்களிடத்திலும் நீக்கமற இருப்பவர் இறைவன் என்ற இந்து மத கருத்தும், ஆசையே துன்பத்திற்கு காரணம் என்ற புத்த மத கருத்தும், ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு என்ற கிறிஸ்துவ மத கருத்தும், ஒருவன் தன் வருமானத்தில் ஒரு சிறிய பங்கு விளம்பரமின்றி ஏழை, எளியவர்க்கு உதவி செய்ய வேண்டுமென்ற முஸ்லீம் மத கருத்தும், பிற உயிர்களை கொள்ளாது வாழ்பவனுடைய வாழ்க்கையே சிறந்த அறம் என்ற ஜைன மத கருத்து என அனைத்து மத கருத்துக்களை கூறி உள்ளார்...

வள்ளுவர் இந்து, கிறிஸ்து, முஸ்லீம், புத்த, ஜைன மதத்தவரின் பொதுவான கருத்துகளை விளக்கியுள்ளார். திருக்குறள் தனிப்பட்ட மனிதனுக்கோ, மதத்திற்கோ, நாட்டிற்கோ அல்லாமல் நாடு, இனம், மொழி, சமயம் எல்லாவற்றையும் கடந்து மக்களாய்ப் பிறந்த அனைவருக்கும் எக்காலத்திற்கும் இயைந்த கருத்துகளைக் கூறுகிறது.

சரி திருவள்ளுவர் கடவுளாக குறிப்பிடுபவர் யார் என்று ஆராய்ந்தால் அதற்கு  முதல் அதிகாரம் அதாவது கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் முதல் குறளே அதற்கு சாட்சி...

"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
  பகவன் முதற்றே உலகு."


மேலே உள்ள குறளின் பொருள் என்னவென்றால் "எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது" என்பதே பல அறிஞர்களின் கருத்தாகும்.

ஆனால் திருவள்ளுவர் நேரடியாகவே இறைவனை குறிப்பிட்டு இருக்கிறார் "ஆதி பகவானை முதலாக கொண்டதே உலகம் என்று" இங்கு நான் ஆதி பகவான் என்று யாரை குறிப்பிடுகிறார் என்று அனைவருக்கும் தெரியும். ஆம் 

"சூரியனே"


சூரிய பகவானை முதலாக கொண்டதே உலகம் என்று திருவள்ளுவர் கூறுகிறார். ஒரு காலத்தில் பல நாடுகளில் சூரிய பகவானை கடவுளாக வணங்கியது நாம் அறிந்ததே. இதற்கு சில விளக்கங்களை கொடுக்கிறேன்.


ஆதி என்பது சூரியனை தான் குறிக்கிறதா என பலருக்கு சந்தேகம் வரலாம். ஆம் அது சூரியனையே குறிக்கிறது என்பதற்கு உலகமே ஒன்றுபடக்கூடிய சில ஆதாரங்களை கூறுகிறேன்.

நம் தமிழ் மொழியில் வாரத்தின் முதல் நாளை குறிக்கக்கூடிய சொல் "ஞாயிறு"  என்பது அனைவரும் அறிந்ததே. சூரியனுக்கு ஆதவன், கதிரவன், ஞாயிறு, என்று பல பெயர்கள் தமிழில் உண்டு. ஞாயிறு என்ற சொல்லில் "ஞா" என்றால் நடுவில் தொங்கிகொண்டு என்பது பொருள். யிறு என்றால் இறுகப் பற்றிக் கொண்டுள்ள கிரகங்கள் என்று பொருள். எனவே நடு நாயகமாக விளங்கும் சூரியன் மற்றைய கிரகங்களைப்பற்றிக் கொண்டுள்ளது. அவனின் பிடிதளர்ந்தால் உலகத்தின் கதியும் அதோகதிதான். எனவே சூரியனே வாரத்தின் முதல்வனாக திகழ்கிறான்.

தெலுகு மொழியில் நேரிடையாகவே வள்ளுவனுடைய வார்த்தை வாரத்தின் முதல் நாளை குறிக்கக்கூடிய சொல்லாக உள்ளது. அது தான் "ஆதி வாரம்" இங்கும் வாரத்தின் முதல்வனாக ஆதி (சூரியன்) என்பவன் திகழ்கிறான்.  ஹிந்தியிலும் கூட வாரத்தின் முதல் நாள் "ஆதிவார்" என்றே கூறுகின்றனர்.

இதை விட ஒரு ஆச்சர்யம் என்னவென்றால் உலக பொது மொழியாக திகழும் ஆங்கிலத்திலும் கூட வாரத்தின் முதல்வனாக சூரியனே திகழ்கிறான் "சண்டே" (SUNDAY). என்ன ஒரு உலக ஒற்றுமை பாருங்கள். இந்த ஒற்றுமை தற்செயலாக நடந்ததா இல்லை, அனைத்தும் கோர்க்கப்பட்டதா என்று தெரியவில்லை.

எனவே திருவள்ளுவர் "ஆதி பகவான்" என குறிப்பிடுவது முதல்வனான (ஆதியாகிய) சூரியனையே என்பது புரிந்து இருக்கும்.

இது மட்டுமல்லாமல் அகத்திய முனிவர் இறைவனை ஜோதியாய், ஒளியாய் என்று குறிப்பிடுகிகிறார், வள்ளலார் அவர்கள் அருட்பெருஞ் ஜோதியே  தனி பெரும் கருணை என இறைவனை ஒளியாய் கண்டுள்ளனர்.

  



சூரியன் என்றால் இயக்குபவன் என்பது பொருள். உலகம் தோன்றுதற்கும்  ஒடுங்குதற்கும் காரணமானவன் சூரியன். உலக உயிர்கள் அனைத்தையும் அவனே வாழ வைக்கிறான். அவனால் ஒளியும் வெப்பமும் தோன்றுகின்றன. ஆதி மக்கள் கண் கண்டு வணங்கிய முதல் கடவுள் சூரியனே.



கோவலன் கொலையுண்ட போது கண்ணகி சூரியனைப் பார்த்து தாய்கறிச் செல்வனே! கள்வனோ என் கணவன் எனக் கேட்டதாக சிலப்பதிகாரம் கூறுகின்றது. பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான பட்டினப்பாலை என்ற நூலில் ஏழு குதிரைகள் பூட்டிய ஒன்றைச் சக்கரத் தேரில் பயணிக்கும் உருவமுடையவனாக சூரியன் சித்தரிக்கப்பட்டுள்ளான்.

கால தேவனும் சூரியனே. ஒவ்வொரு நாளும் சூரியன் உதிப்பதற்கு இடைப்பட்ட காலம் ஒரு நாள் எனப்படுகின்றது. ஒரு நாள் சென்றால் நமது ஆயுளில் ஒரு நாள் கழிந்து விடுகின்றது. அதனால்தான் நாள் என ஒன்று போல் காட்டி உயிர் ஈரும் வான் அது உணர்வார்ப் பெறின் என்றார் வள்ளுவர்.

ரோமாபுரியில் டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி சூரியனின் பிறந்த நாளாகக் கொண்டாடப்பட்டது. செளரம் சூரியனை முழுமுதற் கடவுளாகக் கொண்ட சமயமாகும். புராணங்களிலும் இதிகாசங்களிலும் சூரியனைப் பற்றி பல சம்பவங்கள் எடுத்துக் கூறப்பட்டுள்ளன. குந்திதேவியின் முதற் கணவன் சூரியன் என்று மகாபாரதம் குறிப்பிடுகின்றது.

எனவே திருவள்ளுவர் "ஆதி பகவன்" என கடவுள் வாழ்த்து பகுதியில் முதல் குறளில் குறிப்பிடுவது முதல்வனாகிய சூரியனையே.




திருவள்ளுவர் எம் மதத்தை சேர்ந்தவரே என பெருமை பாராட்டி கொள்ளாமல், அவர் எழுதிய திருக்குறள்களின்படி நடக்க முயற்சிப்போம்...

வாழ்க வள்ளுவர்! வாழ்க அவர் பெருமைகள்!!

8 comments:

  1. அருமையான பதிவு...

    ReplyDelete
  2. நல்லா இருக்கிறீர்களா வெங்கட்,
    என்ன தெரியுதா?
    நான் தான் கமல்(கமலக்கண்ணன்). என்னை காணவில்லை என்று நீங்கள் நண்பர் ராஜாவிடம் விசாரித்ததை அறிந்தேன்.
    நான் இன்னும் வலையில் செயல்பட்டுக் கொண்டுதான் சார் இருக்கிறேன்.

    என் வலை-http://ivaryaar.blogspot.com

    இந்த பதிவு நல்லா இருக்கு சார். உங்கள் தமிழ்நடை நல்லா இருக்கு.

    உலகில் முதலில் 'ரா' என்ற சூரிய கடவுளை தான் வழிப்பட்டார்கள் என்று எகிப்து தேசத்தில் கிடைத்த ஆதாரங்களை வைத்து வரலாறு சொல்கிறது.

    ஆனால் சமீபத்தில் துருக்கி நாட்டில் கிடைத்த 'கொபல்கி திபே' என்ற கல்வெட்டு ஆதாரங்கள் எகிப்து நாட்டில் சூரிய கடவுளிற்கு கிடைத்த ஆதாரங்களை விட 8000 ஆண்டுகள் பழமையானதாக உள்ளன. கொபல்கி திபே கல்வெட்டுகள் சூரியனை தெய்வமாக சித்தரிக்கவில்லை.

    உண்மை நம் கண்களுக்கு இன்னும் மறைக்கப்பட்டுள்ளது சார்.

    கிறிஸ்தவர்கள் திருவள்ளுவரை மட்டுப்படுத்துவதாக எண்ண வேண்டாம்.

    திருக்குறள்கள் பல பைபிளின் நீதிமொழிகள் மற்றும் சங்கீதங்களுடன் ஒத்துப்போகின்றன சார். நீதிமொழிகளும் சங்கீதங்களும் திருக்குறளிற்கு முன்பு எழுதப்பட்டவைங்க.

    அதற்காக திருவள்ளுவர் தோமா போதனையைக் கேட்டு எழுதினார் என்று நான் சொல்லல.
    தோமா தமிழகம் வந்தார், அவர் சொன்னத கேட்டு வள்ளுவர் திருக்குறளை இயற்றினார் என்று கிறிஸ்தவர்கள் கூறினால் அவர்களை என்ன சொல்வது?

    அவர்களிடம் இருக்கும் அழகிய சங்கீதங்களையும், நீதிமொழிகளையும் மலைப்பிரசங்கத்தையும் பவுலின் அறிவுரைகளையும் அவர்கள் படிக்கட்டும்.அதைவிட வேறென்ன அவர்களுக்கு வேண்டுமோ தெரியல.

    தோமா தமிழகம் வந்தார் என்று போராடும் அவர்கள் முதலில் 'இயேசு தனக்காக வந்தார்' என்று மகிழட்டும். அதைவிட வேறென்ன அவர்களுக்கு வேண்டும்?
    வேதத்த புகழ்ந்தேனே அன்றி திருக்குறள விட்டுகொடுக்கல சார்

    ReplyDelete
  3. வணக்கம் நண்பரே சுகமாக இருக்கிறீர்களா? அறிவியல் என்ன சொல்கிறது என்றால் சூரியனில் இருந்து சிதறிய சின்ன துகள் தான் பூமி என்கிறது சரியா... பூமியை விடப் பெரிய கிரகமான ஜூபிடர் – 1400 பூமிகளைக் கொள்ளும் அளவிற்கு பெரியது. சூரியனுக்குள் 980 ஜூபிடர்கள் கொள்ளுமாம். அதே நேரத்தில் சூரியனில் 13,72,000 பூமிகள் கொள்ளும் என்றால் சூரியன் பூமியை விட எவ்வளவு பெரியது?(சூரியனைவிட பெரிய கோள்களும் உள்ளன) சரி இதையெல்லாம் படைத்த இறைவன் எவ்வளவு பெரியவராய் இருக்க வேண்டும் நீங்களே சொல்லுங்கள்.
    இவற்றையெல்லாம் படைத்த இறைவன் என்ன செய்கிறார் பாருங்கள், ஆதியாகமம் 1:2-பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார். இதற்கு என்ன பொருள் சொல்லுங்க,
    ஆதியாகமம் 3:8 பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். இதற்கும் என்ன பொருள் என்று சொன்னால் நலமாக இருக்கும். இவ்வளவு பெரிய சூரிய குடும்பத்தை உருவாக்கியவர் சாதாரண மனிதனாக வருவாரா சொல்லுங்கள்...? உலகத்தில் நடக்கும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு இவை எல்லாம் பார்த்துக்கொண்டு சும்மா ஒரு அறையிலே சிலையா நிற்பாரா? இல்லை பைபிளில் ஒரு வசனமா இருந்து போய்விடுவாரா சொல்லுங்கள்...?

    ReplyDelete
  4. இன்று பல தேவாலயங்களில் சங்கீதம் நீதிமொழிகள் தவிர வேறு எதுவும் பிரசங்கத்தில் எடுப்பது கிடையாது.

    //அவர்கள் முதலில் 'இயேசு தனக்காக வந்தார்' என்று மகிழட்டும்//
    இதை குறித்து தாங்கள் கொஞ்சம் விளக்கினால் நலமாக இருக்கும்

    ReplyDelete
  5. அட கடவுளே,
    சார் நீங்க என்ன வாக்குவாததிற்கு அழைப்பத நினச்சு எனக்கு வியப்பா இருக்கு. 2 மாததிற்கு முன் நான் கண்ட வென்கட் இன்னும் அதே மாரிதான் இருக்கீங்க...பரவால..

    சார் பூமி சூரியனில் இருந்து வெடித்து சிதரிய கோள் என்ற அறிவியல் எல்லாம் 'இருக்கலாம்' என்ற யூக கோட்பாடுகள் தான். சூரியனை பெரிது என்று கூறி வியப்பதில் அர்த்தம் இல்லை. சூரியனை விட மிகப்பெரிய கோள்கள் எல்லாம் இருக்கு சார். அவைகள் முன் சூரியன் ஒரு துகல் போன்றவை. இதனை இஸ்லாமிய நூலான வெற்றிபாதை என்ற நூலில் படித்தேன்.

    என்னிடம் 2 மாதம் முன்பு பேசிய வென்கடா நீங்கள்? தெய்வத்தை அளவு வைத்து அளவிடும் தங்களை என்ன என்று சொல்ல. இறைவன் சக்தி நம் சிந்தனைக்கு அகப்படாதது. அவருக்கு சிறு பாக்டீரியா அளவு என்ன? பெரிய சூரியன் அளவு என்ன?

    //அவர்கள் முதலில் 'இயேசு தனக்காக வந்தார்' என்று மகிழட்டும்//
    வியக்க தக்க அண்டத்தை படைத்த தெய்வம் நமக்காக மனிதனாக வந்தது நமக்கு எவ்வளவு மகிழ்ச்சியான விசயம்!

    நீங்கள் ஆதியாகமத்தை குறித்து முன்பு வினவிய வினாக்கலுக்கு என் பதிவில் விளக்கங்கள் உள்ளன சார். விரும்பினால் படியுங்கள்.

    நன்றி...

    ReplyDelete
  6. எவ்வளவு சொன்னாலும் நீங்கள் திருந்த மாட்டீர்கள், ஏனென்றால் நீங்கள் தலை நிமிர்ந்து உலகம் எப்படி இருக்கிறதென்று கூட பார்க்காத கண்மூடித்தனமாக செல்லும் செம்மறி ஆடுகளை போல் அல்லவா இருக்கிறீர்கள்... தொடரட்டும் உங்கள் மதப்பற்று நன்றி... :)

    ReplyDelete
  7. நான் உங்களுடைய வலைதளத்திற்கு வந்தால் உங்கள் வலைதளத்தை பார்வையிடும் செம்மறி ஆடுகளின் மனது பாதிக்கும் பரவாஇல்லையா சொல்லுங்கள் வந்து என்னுடைய கருத்துக்களை தெரிவிக்கிறேன்... நன்றி...

    ReplyDelete
  8. பரவாயில்லை சார்... :-).

    நீங்களும் அவரது அன்பை அறிந்து கொள்வீர்கள்...:-)

    வாத்ததிற்கு அஞ்சி ஓடாத செம்மறி கூட்டம் தான் நாங்கள்... வாருங்கள்... :-)

    ReplyDelete