மார்கழி மாத உண்மைகள்...
இந்து மதத்தில் பல சடங்குகளும், சம்பிரதாயங்களும் எதற்கு செய்கிறோம் எதனால் செய்கிறோம் என்றே தெரியாமல் செய்கிறார்கள் குறிப்பாக ராகு காலம் பார்ப்பது, எமகண்டம் பார்ப்பது, பூனை குறுக்கே வந்தால் வெளியில் செல்வதை தவிர்ப்பது இன்னும் பல சம்பிரதாயங்கள் இந்த இந்து மதத்தில் புதைந்து கிடக்கின்றன. இந்து மதம் மட்டுமலாமல் இன்னும் ஒரு சில மதங்களில் எதற்காக இந்த விழாவை வருடாவருடம் செய்கிறோம், எதற்காக இந்த சடங்கு செய்கிறோம், என்றே தெரியாமல் செய்கின்றனர் மக்கள். இதற்கு ஒரு குட்டி கதை சொல்லி பதிவை தொடர விரும்புகிறேன்.
பொதுவாக நமது மக்களில் பலர் திரிபு விசயங்களை உண்மையென நம்ப ஆரம்பித்து விடுவார்கள்.அப்படி தான் மார்கழியில் அனைத்து தெய்வ வழிபாடு என, வழிபாட்டிற்கு மட்டுமே அந்த மாதத்தை பயன்படுத்திக் கொள்கிறார்கள். தெய்வ வழிபாட்டினால் மக்களுக்கு சந்தோசத்திலும், செல்வத்திலும் பீடுடைய மாதமாகவே மார்கழி மாதம் இருந்தது. நாளடைவில் பீடுடைய மாதம் பீடை மாதமாக மாறியது.
"துறவி ஒருவர் தன் சீடர்களுடன் தினமும் தியானம் செய்வது வழக்கம். இவர் தியானம் செய்யும்போதெல்லாம் ஒரு பூனை இவரை தொந்தரவு செய்வதையே வாடிக்கையாக கொண்டிருந்தது. ஒவ்வொரு முறையும் இவர் தியானம் செய்யும் பொது அந்த பூனையை ஒரு மரத்தில் கட்டிப்போட்டு தியானம் செய்ய ஆரம்பிப்பார். சில வருட காலம் சென்றது, துறவியும் இறந்து விட்டார் பூனையும் இறந்து விட்டது. துறவியிடம் சீடனாக இருந்த ஒருவன் குரு ஆனான். இவன் தினமும் தியானம் செய்ய ஆரம்பிக்கும் முன் ஊருக்குள் சென்று ஒரு பூனையை பிடித்து வந்து மரத்தில் கட்டிப்போட்டு தியானம் செய்ய ஆரம்பித்தான்."
இந்த கதையை போலவே இன்றும் ஒரு சில மதத்தை சேர்ந்தவர்கள் ஏன் செய்கிறோம் எதனால் செய்கிறோம் என்றே தெரியாமல் பல சடங்குகளும்,சம்பிரதாயங்களும் செய்கிறார்கள். ஒருவன் தன் பெற்றோரிடம் தனக்கு திருமணம் செய்ய வேண்டுகிறான். அவர்கள் மார்கழி மாதம் போன பிறகு தை மாதத்தில் பெண் பார்த்து நிச்சயம் பண்ணிக்கலாம் என்று சொல்கிறார்கள். ஏன் என்று கேட்டால் மார்கழி மாதம் பீடை மாதம் என்றும் அதனால் இந்த மாதத்தில் எந்த ஒரு நல்ல காரியமும் செய்ய கூடாதென்று சொல்கிறார்கள். அது மட்டுமல்லாமல் புது வீட்டில் குடி புகுவது, குழந்தைகளுக்கு பெயர் வைப்பது, வளைகாப்பு நடத்துவது மற்றும எந்த ஒரு நல்ல காரியங்களும் செய்ய மாட்டார்கள். கேட்டால் மார்கழி மாதம் பீடை மாதம் என்றும் இந்த மாதத்தில் எந்த நல்ல காரியமும் செய்யக்கூடாதென்பர்கள். உண்மையாக சொல்லப்போனால் காரணமே வேறாக இருக்கும்.
பொதுவாக நமது மக்களில் பலர் திரிபு விசயங்களை உண்மையென நம்ப ஆரம்பித்து விடுவார்கள்.அப்படி தான் மார்கழியில் அனைத்து தெய்வ வழிபாடு என, வழிபாட்டிற்கு மட்டுமே அந்த மாதத்தை பயன்படுத்திக் கொள்கிறார்கள். தெய்வ வழிபாட்டினால் மக்களுக்கு சந்தோசத்திலும், செல்வத்திலும் பீடுடைய மாதமாகவே மார்கழி மாதம் இருந்தது. நாளடைவில் பீடுடைய மாதம் பீடை மாதமாக மாறியது.
மார்கழி மாதம் இது, மனிதனை உயர்வழிக்கு அழைத்துச் செல்லும் மாதம். இந்து மத சம்பிரதாயப்படி, குறிப்பிட்ட ஆடி, புரட்டாசி, மார்கழி மாதங்களில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடத்துவதில்லை. ஆடியில் அம்பாள் வழிபாடு, புரட்டாசியில் பெருமாள் வழிபாடு, மார்கழியில் அனைத்து தெய்வ வழிபாடு என, வழிபாட்டிற்கு மட்டுமே அந்த மாதங்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள். பக்தி மார்க்கம் நிறைந்து உள்ள இந்த மாதத்திற்குச் சில விஷேசத் தன்மைகளைக் கொடுக்கிறது. கீதையில் கிருஷ்ண பரமாத்மா மாதங்களில் நான் மார்கழி என்று சொல்வதாகச் சொல்லப்படுகிறது. அதிகாலையில் குளிர்ந்த நீரில் குளித்து கோவிலுக்குச் சென்று இறைவனை வழிப்பட்டுப் பஜனை செய்வது என்ற வழக்கம் ஆண்களுக்கு உரியதாக இருக்கிறது. பெண்கள் அதிகாலையிலேயே எழுந்து குளித்து வாசலில் கோலமிடுவது வழக்கம். இது இலக்கியங்களில் தை நீராடல் என்றும் மார்கழி நீராடல் என்றும் குறிப்பிடப்படுகிறது. இம்மாதங்களில், சுபநிகழ்ச்சி நடத்தினால், வழிபாடு பாதிக்கும் என்பதாலேயே, இம்மாதங்களில் அவற்றை நடத்தாமல் தவிர்த்தனர்.
இப்படியான மதப் பின்னணியில் உருவாக்கப்பட்ட ஏற்பாடுகளை கொஞ்சம் உற்று நோக்கினால் இதில் சில அறிவியல் தன்மைகள் இருப்பது தெரிய வருகிறது மார்கழி மாதம் அதிகாலையில் 6 மணிக்கு முன்னால் கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டும் என்ற வழக்கம் அறிவியல் அடிப்படையில் நன்மை பயக்கும் பழக்கமாகும் என்று கருத இயலும். மார்கழி மாதத்தில் அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரையில் காற்று மண்டலத் தில் ஓசோன் மிக அதிகமாகக் கிடைக் கிறது. ஓசோன் என்பது உயிர்வளியின் (ஆக்ஸிஜன்) மூன்று அணுக்கள் சேர்ந்து அமைந்த காற்றாகும். சாதாரணமாக காற்று மண்டலத்தில் உயிர்வளியின் இரண்டு அணுக்களால் ஆன உயிர்வளி தான் இருக்கும்.
இந்த மார்கழி மாதத்தில் அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரைக்கும் மட்டும் தான் உயிர்வளியின் மூன்று அணுக்கள் கொண்ட ஓசோன் கணிசமான அளவில் இருக்கும். இந்த ஓசோனுக்கு வீரியம் அதிகம். இதைச் சுவாசிப்பதால் நம் உடலில் உள்ள இரத்தம் விரைவாகச் சுத்தம் அடைகிறது. நரம்பு மண்டலத்தைத் துடிப்பாக வைத்துக் கொள்வதன் மூலம் நினைவாற்றல் பெருகுகிறது, மார்கழி மாதக் காற்று தோலுக்கும், வெள்ளை சிகப்பு உயிர் அணுக்களுக்கும், உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது. புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும் உண்டு என்று சொல்லப்படுகிறது. இது விஞ்ஞான பூர்வமான அறிவியல் உண்மை. இவ்வாறு நன்மை பயக்கும் ஓசோனைச் சுவாசிப்பதற்கு நாம் வெளியில் செல்ல வேண்டும். இவ்வளவு அதிகாலையில் வெறுமனே ஒரு மனிதனை வெளியே சென்று ஓசோன் நிறைந்த காற்றைச் சுவாசிக்கச் சொன்னால் எத்தனை பேர் கேட்ப்பார்கள்? அதற்குப் பதிலாக மார்கழி மாதம் அதிகாலை 6 மணிக்கு முன்னால் கோயிலுக்குப் போகும் பழக்கத்தை ஏற்படுத்திவிட்டால், மக்கள் அனைவரும் ஓசோனைச் சுவாசித்து உடல் நலம் சிறந்து, நினைவாற்றல் பெருகி நன்மை அடைவாரகள். ஆகவேதான் மார்கழி மாதம் அதிகாலையில் கோயிலுக்குப் போக வேண்டும் என்ற பழக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்பது நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயமாக இருக்கிறது.
இன்றைய நிலையில் மக்கள் அந்த விஷயங்களை எல்லாம் தங்களது அறியாமையாலும் அசட்டையாலும் மறந்து விட்டார்கள். இப்படிப்பட்ட சம்பிரதாயங்களில் புதைந்து கிடக்கிற உண்மைகள் நம்மால் புரிந்து கொள்ளப்ட வேண்டும். அதன் அறிவியல் தன்மைகளை நாம் உணர்ந்து கொண்டு அதன்படி நடக்க வேண்டும். கோயில்களுக்கு செல்லாவிட்டாலும், மார்கழி மாதத்தில் அதிகாலை எழுந்து குளிர்ந்த நீரில் குளித்து தமக்கு பிடித்த கடவுளை தொழுது வந்தால் மனதிற்கும், உடல் நலத்திற்கும் நன்மை பயக்கும்.

சரி மார்கழி மாதம் இந்துக்களுக்கு மட்டும் தான் விழாக்களா? மற்ற மதத்தவருக்கு இல்லையா? என்றால் ஆம் இதோ நானும் இருக்கிறேன் என்கிறது மார்கழி மாத கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்...
(தொடரும்...)
No comments:
Post a Comment