Tuesday, February 12, 2013

தஞ்சை பெரிய கோயிலில் யவனர்...?


தஞ்சை பெருவுடையார் கோயில்


இராஜராஜசோழன் என்னும் மாபெரும் தமிழ் மன்னனை யாரும் மறந்திருக்க மாட்டோம். தமிழ்நாட்டில் கி.பி. 985ம் ஆண்டு முதல் கி.பி. 1012 ஆண்டு வரை தஞ்சையை தலைநகராகக் கொண்டு அரசாண்டு வந்த சோழ மன்னன்தான் இராஜராஜன்சோழன்.

இராஜராஜ சோழ மன்னனால் கட்டப்பட்ட தஞ்சைப் பெருவுடையார் கோயில் அல்லது பிரகதீசுவரர் கோயில் அல்லது தஞ்சை பெரிய கோயில் தஞ்சாவூரிலுள்ள இந்து சமயக் கோயிலும் உலகப் பாரம்பரியச் சின்னமும் ஆகும். இக்கோயில் 10 ஆம் நூற்றாண்டில் சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும் பின்னர் தஞ்சையை நாயக்கர்கள் ஆண்டகாலத்தில் தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்ட இக்கோயில் 17,18ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிருகதீசுவரம் ஆகியது. தஞ்சைப் பெரியகோவில் எனவும் இக்கோவில் அறியப்படுகிறது.

கி.பி.985 முதல் 1070 வரை சோழர் கலை உயர்வடைந்து உச்ச நிலையில் இருந்தது. இந்தக் காலத்தை மத்திய சோழர் காலம் என்றழைக்கலாம், இந்தக் காலத்தில் ஏராளமான கோயில்கள் கட்டப்பட்டன. பரந்து கிடந்த சோழப் பேரரசு எங்கும் கோயில்கள் கட்டும் பணி தொடர்ச்சியாக நடந்தது. இக்காலத்தில் எத்தனையோ சிறு கோயில்கள் கட்டப்பட்டன. இன்றும் உலகம் தமிழனைத் திரும்பிப் பார்க்கும் வண்ணம், இராஜராஜசோழனால் கட்டப்பட்ட  உலக அதிசயங்களுக்கு நிகரான ஒரு அழியாச் சின்னமே தஞ்சைப் பெருவுடையார் கோயில்.

இந்த பிரம்மாண்டமான தஞ்சை பெரிய கோயிலை ராஜராஜசோழன் கட்டுவதற்கு காரணமாக அமைந்தவை இலங்கையில் கட்டப்பட்டு இருந்த பிரம்மாண்டமான புத்தர் சிலைகளே. ஈழத்துக்கு படையெடுத்து சென்ற போது காண நேர்ந்த புத்தர் சிலைகளை போல் நம் சோழ நாட்டிலும் வானளாவிய கோயில் ஒன்றை எழுப்ப வேண்டும் என்று அவருடைய எண்ணத்தில் அரும்பியது. அவருடைய எண்ணத்தில் நினைத்ததை செயலில் காட்டி வெற்றியும் பெற்று விட்டார். இன்னும் ஆயிரமாயிரம் வருடங்கள் ஆனாலும் இந்த கோயில் அழியாப்புகழ் பெற வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையில் கட்டப்பட்ட இந்த கோயில் இன்றும் தன்னுடைய புகழை காத்துக்கொண்டிருக்கிறது.

இப்படி ஆழியாப்புகழ் கொண்ட கோயிலில் மிகப் பிரமாண்டமான கட்டப்பட்ட இராஜகோபுரம் மிகவும் அழகான கலை நயத்துடன் கட்டப்பட்டது. அதில் யாருமே எதிர்பார்க்காத விசேசம் ஒன்று இருந்தது. ஆம்! அந்தக் கோபுரத்தில் காணப்பட்ட ஒரு உருவச்சிலை எல்லோரையும் புருவத்தை உயர்த்த வைத்தது. ஒரு இந்துக் கோயில் கோபுரத்தில் இது சாத்தியமா? என்னும் கேள்விகள் ஒலிக்கும் வகையில் இருந்தது அந்த உருவச் சிலை. கோபுரங்களில் இந்துக்களின் நாகரீகங்களையும், கலைகளையும், தெய்வங்களையும் சிலைகளாக வடிப்பதுதான் நாம் இதுவரை பார்த்தது.

ஆனால் இது……..! அப்படி அந்தக் கோபுரத்தில் இருந்த உருவச் சிலை என்ன தெரியுமா….?
ஒரு மேலைத் தேச நாட்டவன், தலையில் தொப்பியுடன் காணப்படுகிறான். தஞ்சை மன்னனுக்கும் இந்துக்களின் ஆச்சாரத்துக்கும் ஏற்பே இல்லாத் தன்மையுடன் அந்தச் சிலை பெரிதாகக் காட்சியளிக்கிறது. கீழே காண்க...




“முழங்காலுக்கும் மொட்டைதலைக்கும் முடிச்சுப் போடுவது போல” என்று சொல்வார்களே, அது போல இந்த மேலைத்தேச மனிதனின் சிலை, பாரம்பரியமிக்க இந்துக்களின் கோபுரத்தில் அமைந்திருக்கிறது என்றால், அதற்கென ஒரு காரணம் நிச்சயமாக இருந்தே தீருமல்லவா…?

இராஜராஜசோழனின் காலத்தில் யவனர்களாக வந்து எமது கோவிலிலேயே உருவமாக அமைவதற்கு, அந்த மேற்குலகத்தவனுக்கு வரலாற்றில் பதிவாகாத வலுவான காரணம் ஒன்று இருந்திருக்கும் அல்லவா…?

கண்டிப்பாக மேலைநாட்டு தேசத்தை சேர்ந்தவன் எந்த வகையிலாவது ஒரு வகையில் தஞ்சை பெரிய கோயில் கட்டுவதற்கு உதவியிருக்க வேண்டும் என்று எடுத்துக்கொள்ளலாமா? சரி  கோயில்களில் சிலை வைப்பது எதற்கு? சிலை வழிபாடு என்பது எப்படி உருவானது? அனைத்து மதங்களிலும் சிலை வழிபாட்டு முறை இருப்பதை நாம் பார்க்கிறோம். கண்ணிருந்தும் காணாது, வாயிருந்தும் பேசாது, காதிருந்தும் கேளாது என்று சொல்பவர்கள் கூட சிலை வழிபாட்டை கொண்டுள்ளனர் பார்ப்போம்..... சிலை வழிபாடு குறித்து...

No comments:

Post a Comment